இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

43

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு அலுவலகத்தில் அதிகாரியும், அவரு டைய உதவியாளர்களும் சேர்ந்தே ஒரு பணியை முடிப்பதுபோல, ஒரு ஜாதகரின் வாழ்வில் நடைபெறும் எல்லா பலன்களுக்கும், கிரகங்களும் உபகிரகங்களும் சேர்ந்தே காரண மாக அமைகின்றன. பிரச்ன ஆரூடத்தில், உபகிர கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் போனதால், துல்லியமான பலன்கள் தவறிப் போகின்றன. சூரியனுக்கு ஜ்வாலா முகமும், சந்திரனுக்கு பரிவேடமும், சுக்கிரனுக்கு இந்திர தனுசுவும், செவ்வாய்க்கு தூமனும், புதனுக்கு அர்த்தபிரகணனும், குருவுக்கு காலவேகமும், சனிக்கு குளிகனும் உபகிரகங்களாக அமை கின்றன. எல்லா உபகிரகங்களிலும் குளிகனே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதனா லேயே குளிகை காலமும் முக்கியத்துவம் பெறு கிறது. இப்போதும் கேரள மற்றும் ஆந்திரத்து ஜோதிடர்கள், மாந்தி (குளிகன்) கணிதத்திற்கு முக்கியத்துவம் தருவது நோக்கத்தக்கதே. நஷ்ட ஜாதகத்தைக் காணும்போது, பிரச்ன ஆரூடத் தில் மாந்தி உதயமாகும் பாகையே அடிப்படை யானது என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

GandharvaNadi

""அமிர்தகடேசரே! மனிதர்கள் ஆசையின் மயக்கத்திலும், அறியாமையின் கலக்கத்திலும் பல தவறுகளைச் செய்து, இறந்தபின் நரகத்தை அடையும்முன் வைதாரிணி என்னும் நரக நதியைக்கடக்கத் துன்புறுகிறார்கள். இந்த துன்பத்திலிருந்து விடுபட, எளியோரும் அறியு மாறு ஒரு உபாயத்தைக் கூறியருள வேண்டு கிறேன்''என அன்னை சுந்தரகுஜாம்பிகை, திருவீழிமிழலை திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வீழியழகரை வேண்டிக்கேட்டாள்.

நீலகண்டேசர் உரைத்தது- ""விலங்குகளின் முக்குணங்களில் சாத்வீக குணத்துடன் உலகிற்கே தாயாக விளங்கும் கோமாதாவை (பசு) சம்ரக்ஷணை (பாதுகாப்பது) செய்து பூஜிப்பதே சிறந்த உபாயம். இந்திராதி தேவர்களின் இருப் பிடமாகவும், திருமகளின் உறைவிடமாகவும் உள்ள கோமாதாவை வந்தனை செய்பவர் களுக்கு, கேட்டதையெல்லாம் தரும் சுரபி எனும் காமதேனுவின் அருள் கிடைக்கும். பஞ்சகவ்யம், பஞ்சபூதங்களால் வரும் தோஷத்தைப் போக்கும்.

கோபத்ம பூஜையால், சாபங்களும் பாவங்களும் நசிந்துபோகும். கோமாதாவைத் தொழுபவரின் ஜீவன், நூறு யோசனை தூரமுள்ள வைதாரிணி நரக நதியைத் துன்பமின்றிக் கடந்து விசித்திர பட்டணத்தை அடையும். மனிதன், வாழும் போதே செய்யும் கோ சம்ரக்ஷணை வைதாரிணி கோதானத்திற்குச் சமமானது.''

""பிரம்மபுரீஸ்வரரே! "கூர்நிடம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய புனர்பூச நட்சத் திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சனியும், கேட்டை நான்காம் பாதத்தில் புதனும், மூலம் மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், மூலம் நான்காம் பாதத்தில் சூரியனும், திருவோணம் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், சதயம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும், ரேவதி மூன்றாம் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விரிவாக விளக்கவேண்டும்'' என்று திருவிஜய மங்கை எனும் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீவிஜயநாதரை அன்னை மங்களநாயகி வினவினாள்.

முல்லைவனநாதர் உரைத் தது- ""தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் வேம்மண்ணா எனும் பெயருடன், அமராவதி பட்டணத்தில் வாழ்ந்தான்.

இல்வாழ்க்கையில் வெறுப்புற்று, அதிலிருந்து தப்பிப்பதற்காக ஆபத் சந்நியாசம் பெற்று ஆன்மிகத்தில் புகுந்தான். குருவின் உபதேசம் பெற்று பலகாலம் தவம்செய்தான். நெடுநாளா கியும் தன் மனம் லயப்படாமல் போனதால், தன்னுயிரை மாய்த்துக்கொண்டான். அவன் ஜீவன் நரகத்தில் அல்லலுற்றது. புண்ணியம் சேர்த்திட எண்ணி பூவுலகம் சென்றான். இப்பிற வியில், இளம்வயது முதலே சாஸ்திரங்களில் தேர்ச்சிபெற்று, காலஞானத்தை கசடறக் கற் றான். வரும் பொருள் உரைத்தான். பெரும் பொருள் ஈட்டினான். ஆயினும், தன் வலியையும் வேதனையையும் போக்கும் வழியறியாது நோயுற்றான். முற்பிறவியில் தவமென்பது பொறுமையின் வடிவே என்பதை உணராது, தன்னுயிரைத் தானே போக்கி கொலைப்பாதகம் செய்ததால் துன்புறுகிறான். இதற்குப் பரிகார மாக பைராகிகளுக்குப் பாதபூஜை செய்து, அன்னதானம் செய்தால் சுகம் பெறுவான்.''

(வளரும்)

செல்: 63819 58636